ஹோர்முஸ் ஜலசந்தியை மீளத் திறக்க ஒன்றுக்கூடும் 40 நாடுகள்!

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து விவாதிப்பதற்காக, பாரிஸில் உலக தலைவர்கள் ஒன்றுக்கூடவுள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டமார் தலைமை தாங்கவுள்ளார்.

சுமார் 40 நாடுகள் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு பங்கேற்கும் இந்தக் கூட்டம், அமெரிக்க-ஈரானிய போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதிலும், ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையைத் திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தும்.

இதன்போது ஜலசந்தியை நிபந்தனையின்றி உடனடியாக மீண்டும் திறப்பதை ஒரு “உலகளாவிய பொறுப்பு” என்று சர் கெய்ர் அறிவிப்பார் என்றும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பன்னாட்டு முயற்சிக்கு உறுதியளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கு இன்றியமையாத இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதை, ஈரானால் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாதையை மீளவும் திறக்க சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*