ஏவுகணை ஏவுதளங்ளை அதிக வேகத்தில் புதுப்பிக்கும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு இருந்ததை விட, ஈரான் இப்போது தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்களை அதிக வேகத்தில் புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் படைத் தளபதி மஜித் மூசாவி (Majid Mousavi) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நிலத்தடி ஏவுகணைத் தளத்தை அவர் ஆய்வு செய்யும் காணொளியுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்தின் போது எதிரிகளால் தங்களது ஆயுதங்களை மீண்டும் உருவாக்க முடியவில்லை, அவர்கள் உலகின் மறுபக்கத்திலிருந்து ஆயுதங்களைச் சிறிது சிறிதாகக் கொண்டுவர நிர்பந்திக்கப்படுகிறார்கள்,” என்றுக் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*