தமிழகத்தை ஆளப்போவது யார்? நாளை தேர்தல்!

ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் தேர்தல், தமிழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ளது.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்து, தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளது. தமிழகத்தில் இம்முறை நான்கு முனை போட்டி நிலவுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*