ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் தேர்தல், தமிழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்து, தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளது. தமிழகத்தில் இம்முறை நான்கு முனை போட்டி நிலவுகின்றது.
தமிழ்நாடு செய்திகள்
“தமிழகம் தயாராக உள்ளது” – விஜய்யின் பாதுகாவலரின் பதிவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தீவிர பிரசாரம் நேற்று நிறைவடைந்த நிலையில், அவரது தனிப்பட்ட பாதுகாவலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான பதிவு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் பிரசாரக் களத்தில் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு வியந்து, அவரது பாதுகாவலர் இந்தச் செய்தியை தமது முகப்புத்தகத்தில் (Facebook) பகிர்ந்துள்ளார். “இன்று அண்ணாவைப் பிடிப்பது… நாளை அவர் தமிழக மக்களின் இதயங்களைப் […]
விஜயை மறைமுகமாக விமர்சித்த பிரகாஷ்ராஜ்
தமிழகத்தில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் செயற்பாடுகள் மற்றும் அதன் தலைவர் விஜயின் பிரசார முறையை நடிகர் பிரகாஷ்ராஜ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கட்சி வேட்பாளர்களை அறிவித்தும் அவர்களுக்கு ஆதரவாக, ஒவ்வொரு தொகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு சேகரிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் சிபிஐ(எம்) வேட்பாளர் என்.பாண்டியின் பிரசார நிகழ்ச்சியில் பேசிய போது பிரகாஷ்ராஜ் தெரிவித்ததாவது, “ஒரு திரைப்படத்தில் நீங்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ […]
நடிகர் விஜய் – சங்கீதா பரஸ்பர விவாகரத்து? – சென்னையில் வழக்கறிஞர்கள் தீவிர பேச்சுவார்த்தை!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பரஸ்பரம் பிரிவது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதற்கு (Mutual Consent) விஜய் தரப்பு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற […]
பெரம்பூரில் கோலம் போட்டு வாக்கு சேகரித்த விஜய்…
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
ஜனநாயகன் திரைப்படக் கசிவு – சந்தேக நபர்கள் மூவர் கைது
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் கசிந்த விவகாரம் தொடர்பாக, மூன்று முக்கிய சந்தேகநபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தீவிர விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேறொரு திரைப்படத்தின் காணொளி செம்மைப்படுத்துனராக பணியாற்றும் ஒருவர், ‘ஜனநாயகன்’ படத்தின் படத்தொகுப்புபணிகள் நடைபெற்ற கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து படத்தை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் […]





