Author: Arul

ஏவுகணை ஏவுதளங்ளை அதிக வேகத்தில் புதுப்பிக்கும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு இருந்ததை விட, ஈரான் இப்போது தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்களை அதிக வேகத்தில் புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் படைத் தளபதி மஜித் மூசாவி (Majid Mousavi) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நிலத்தடி ஏவுகணைத் தளத்தை அவர் ஆய்வு செய்யும் காணொளியுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. போர்நிறுத்தத்தின் போது எதிரிகளால் தங்களது ஆயுதங்களை மீண்டும் உருவாக்க […]

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் – ட்ரம்ப் மிரட்டல்!

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்துள்ளது எனக் கூறிய அவர், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரான் ஒரு பிரெஞ்சு கப்பல் மற்றும் ஒரு இங்கிலாந்து சரக்குக் கப்பல் […]

விஜயை மறைமுகமாக விமர்சித்த பிரகாஷ்ராஜ்

தமிழகத்தில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் செயற்பாடுகள் மற்றும் அதன் தலைவர் விஜயின் பிரசார முறையை நடிகர் பிரகாஷ்ராஜ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கட்சி வேட்பாளர்களை அறிவித்தும் அவர்களுக்கு ஆதரவாக, ஒவ்வொரு தொகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு சேகரிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் சிபிஐ(எம்) வேட்பாளர் என்.பாண்டியின் பிரசார நிகழ்ச்சியில் பேசிய போது பிரகாஷ்ராஜ் தெரிவித்ததாவது, “ஒரு திரைப்படத்தில் நீங்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ […]

நடிகர் விஜய் – சங்கீதா பரஸ்பர விவாகரத்து? – சென்னையில் வழக்கறிஞர்கள் தீவிர பேச்சுவார்த்தை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பரஸ்பரம் பிரிவது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதற்கு (Mutual Consent) விஜய் தரப்பு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற […]

ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!

ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வான்பரப்பு திறக்கப்படுவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு […]

இலங்கையில் எரிபொருள் விலை குறையுமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில், போர்நிறுத்தக் காலம் முடியும் வரை ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்காகத் திறந்து விடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம் சற்று நிம்மதி அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெய் 98 டொலராக இருந்த நிலையில், ஈரானின் அறிவிப்பிற்குப் பிறகு அது 88 டொலராகக் குறைந்தது. பின்னர் மீண்டும் 92 டொலர் வரை உயர்ந்தது. போர் […]

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வருகிறது QR முறை!

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, இன்று(18) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது. அதன்பின்னர் QR குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 11ஆம் திகதி முதல் இன்று(18) நள்ளிரவு வரை QR குறியீடு இல்லாமல் பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. இருப்பினும், இந்த QR சலுகை டீசல் வாகனங்களுக்கு […]

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘Truth Social’ சமூக ஊடகப் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் உலக நாடுகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி […]

சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி Xi Jinping மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சீனாவில் நடைபெறவுள்ள அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் மிகப்பெரிய நாடான சீனா, தனது தேவைக்கான […]

மீண்டும் குண்டுகளை வீச நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் ‘போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?’ என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது. இதற்கு […]