இலங்கை செய்திகள்

ரணிலின் அனுபவத்தைப் புறக்கணித்தால் இலங்கை மீண்டும் காலனித்துவமாகும்! – வஜிர அபேவர்த்தன

வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, நீண்டகால அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் எனவும், நாட்டு மக்கள் அவரது ஆலோசனைகளையும் பிரயோசனங்களையும் பெற்றுக்கொள்ளத் தவறினால் நாடு மீண்டும் காலனித்துவ நிலைக்குத் தள்ளப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் […]

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவினாலும் மின்சாரம், எரிபொருள் விநியோகம் இலங்கையில் தடையின்றி நடக்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார். களுத்துறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலக சந்தையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. […]

திடீர் சுகயீனத்தால் பிள்ளையான் சிறைச்சாலை வைத்தியசாலையில்…

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் எனவும், தற்போது அவர் அங்குள்ள மருத்துவர்களின் விசேட கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் […]

மீண்டும் வருகிறது QR முறை! தற்காலிக விலக்கு நிறைவு!

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.