மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு எவ்விதமான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு ஈரான் தயாரில்லை என அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் காதிப்சாதே (Saeed Khatibzadeh) தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற ‘அந்தால்யா இராஜதந்திர மாநாட்டில்’ (Antalya Diplomacy Forum) கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
போர்நிறுத்தம் என்பது லெபனான் முதல் செங்கடல் வரை நிலவும் அனைத்து மோதல் பிராந்தியங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான உடன்படிக்கையாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்காலிக இணக்கப்பாடுகளை ஈரான் முற்றாக நிராகரிக்கின்றது என்றும், இந்த மோதல் சுழற்சியானது.
இறுதி முறையாக இங்கேயே முடிவுக்கு வர வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டுமாயின் போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாக அல்ஜசீரா செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.





