இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வருகிறது QR முறை!

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, இன்று(18) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.

அதன்பின்னர் QR குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 11ஆம் திகதி முதல் இன்று(18) நள்ளிரவு வரை QR குறியீடு இல்லாமல் பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இருப்பினும், இந்த QR சலுகை டீசல் வாகனங்களுக்கு செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*