உலக செய்திகள்

ஏவுகணை ஏவுதளங்ளை அதிக வேகத்தில் புதுப்பிக்கும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு இருந்ததை விட, ஈரான் இப்போது தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்களை அதிக வேகத்தில் புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் படைத் தளபதி மஜித் மூசாவி (Majid Mousavi) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நிலத்தடி ஏவுகணைத் தளத்தை அவர் ஆய்வு செய்யும் காணொளியுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. போர்நிறுத்தத்தின் போது எதிரிகளால் தங்களது ஆயுதங்களை மீண்டும் உருவாக்க […]

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் – ட்ரம்ப் மிரட்டல்!

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்துள்ளது எனக் கூறிய அவர், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரான் ஒரு பிரெஞ்சு கப்பல் மற்றும் ஒரு இங்கிலாந்து சரக்குக் கப்பல் […]

ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!

ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வான்பரப்பு திறக்கப்படுவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு […]

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘Truth Social’ சமூக ஊடகப் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் உலக நாடுகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி […]

சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி Xi Jinping மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சீனாவில் நடைபெறவுள்ள அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் மிகப்பெரிய நாடான சீனா, தனது தேவைக்கான […]

மீண்டும் குண்டுகளை வீச நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் ‘போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?’ என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது. இதற்கு […]

எண்ணெய் விலை சரிவு!

ஈரான் போரில் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பான நிகழ்வுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றம் பங்குச் சந்தையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்காலிக முடிவுகளுக்கு இடமில்லை – ஈரான்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு எவ்விதமான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு ஈரான் தயாரில்லை என அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் காதிப்சாதே (Saeed Khatibzadeh) தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற ‘அந்தால்யா இராஜதந்திர மாநாட்டில்’ (Antalya Diplomacy Forum) கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார். போர்நிறுத்தம் என்பது லெபனான் முதல் செங்கடல் வரை நிலவும் அனைத்து மோதல் பிராந்தியங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான உடன்படிக்கையாக […]

எரிபொருள் பற்றாக்குறை – முடங்கும் விமானப் பயணங்கள்!

லுஃப்தான்சா நிறுவனம் ஏராளமான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், நைஜீரிய விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளன. ஈரான் போரின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகம் குறைந்து வருவது மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து அரசாங்கங்களும் விமான நிறுவனங்களும் மிகுந்த அவசர எச்சரிக்கைகளை விடுத்து வருகின்ற நிலையில் இவ் எச்சரிக்கை வந்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சில வாரங்களுக்குள் எரிபொருள் பற்றாக்குறை […]

லெபனானில் போர் நிறுத்தம்: ஈரான் வரவேற்பு!

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் வரவேற்றுள்ளது. எனினும், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த முயற்சி இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அவநம்பிக்கை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம், ஏவுகணை சோதனைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை […]