“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென […]
உலக செய்திகள்
ஹோர்முஸ் ஜலசந்தியை மீளத் திறக்க ஒன்றுக்கூடும் 40 நாடுகள்!
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து விவாதிப்பதற்காக, பாரிஸில் உலக தலைவர்கள் ஒன்றுக்கூடவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டமார் தலைமை தாங்கவுள்ளார். சுமார் 40 நாடுகள் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு பங்கேற்கும் இந்தக் கூட்டம், அமெரிக்க-ஈரானிய போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதிலும், ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையைத் திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தும். இதன்போது ஜலசந்தியை நிபந்தனையின்றி […]
லெபனான் போர்நிறுத்தத்தில் ஹிஸ்புல்லாவும் உள்ளடக்கம் – ட்ரம்ப்
லெபனானின் போர்நிறுத்தத்தில் ஹிஸ்புல்லாவும் இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் மற்றும் லெபனான் ஜனாதிபதியை சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் எப்போது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இஸ்ரேல் – லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்: ட்ரம்ப்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக போர்நிறுத்தம் கிழக்கு நேரப்படி (EST) இன்று மாலை 5 மணி முதல் அமுலுக்கு […]
ஈரானுக்கு அணு ஆயுதத்தைக் கொடுத்தால், “உலகம் வெடித்துச் சிதறும்”- டொனால்ட் ட்ரம்ப்!
ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அனுமதித்தால் உலகம் அழிந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ‘பொக்ஸ் பிசினஸ்’ ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்த அவர், ஈரானுடனான போர் ஒரு முடிவுக்கு வந்தவுடன், சர்வதேச சந்தையில் எரிவாயு விலையும், மின்சாரக் கட்டணமும் பெருமளவு குறையும் எனவும் உறுதியளித்துள்ளார். தற்போதைய பதற்றமான சூழல் தணிந்ததும் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார். […]
ஹோர்முஸ் நீரிணை நிரந்தரமாக திறக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீதான ஆயுத விநியோகத்தை நிறுத்த சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பதன் மூலம் சீனா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளும் பயனடையும் என குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று சீனா உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் வாரங்களில் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள […]





