விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பல திரைப்பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெயிலர்-2’ படத்தின் காட்சிகளும் சமூக வலை தளங்களில் கசிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.
உடனடியாக செயல்பட்ட படக்குழு குறித்த காட்சிகளை உடனடியாக இணையத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளனர்.
இந்த காணொளிகளை பகிர்வதிலோ விளம்பரப்படுத்துவதிலோ ஈடுபட்டுள்ள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்பட அத்தகைய உள்ளடக்கத்தை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





